ஈரோடு, செப். 8 –
ஈரோடு மாவட்டம் சித்தோடு அரசு பொறியியல் கல்லூரியில் மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகள் கபடி போட்டியினை மாவட்ட ஆட்சித்தலைவர் கந்தசாமி துவக்கி வைத்தார். 2025-ம் ஆண்டிற்கான மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகள் பள்ளி, கல்லூரி, பொதுப்பிரிவினர், மாற்றுதிறனாளிகள் மற்றும் அரசு ஊழியர்கள் ஆகிய ஐந்து பிரிவுகளின் கீழ் நடைபெற்று வருகிறது. இந்த விளையாட்டு போட்டிகள் கடந்த 26 ந் தேதி தொடங்கி பல்வேறு போட்டிகள் நடைபெற்று வருகிறது. வருகிற 15 ந் தேதி வரை இந்த போட்டி நடைபெறவுள்ளது.
மாவட்ட ஆட்சித் தலைவர் கந்தசாமி ஈரோடு மாவட்டம், சித்தோடு அரசினர் பொறியியல் கல்லூரியில் மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகள் கபடி போட்டியினை துவக்கி வைத்தார். பொது பிரிவு கபடி போட்டியில் ஒரு அணிக்கு 12 நபர்கள் வீதம் 28 அணிகள் பங்கேற்கற்றன. மாவட்ட ஆட்சித்தலைவர் போட்டியில் பங்குபெற்ற விளையாட்டு வீரர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார். மேலும், விளையாட்டு வீரர்களுக்கு ஏற்படுத்தப்பட்டுள்ள குடிநீர், உணவு, கழிப்பிட வசதிகள். மின்சார வசதிகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டு அலுவலர்களிடம் கேட்டறிந்தார்.
மேலும் அனைத்து பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவியர்களுக்கான கபடி விளையாட்டு போட்டி நடைபெறுகிறது. இதில் ஒரு அணிக்கு 12 மாணவர்கள் வீதம் 60 அணிகளும், அணிக்கு 12 மாணவியர்கள் வீதம் 25 அணிகள் என மொத்தம் 85 அணிகள் பங்கேற்றனர்.



