ஈரோடு, செப். 1 –
வேதாத்திரி மகரிஷியால் தோற்றுவிக்கப்பட்ட சமு தாய சேவா சங்கத்தில் பெண்களின் பெருமையைப் போற்றும் விதத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்டு 30-ம் தேதி அன்று மனைவி நல வேட்பு நாள் என்று சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். விழாவில் மனைவியை கௌரவிக்கும் விதமாக கணவர்கள் தங்களது மனைவிக்கு மலர் கொடுத்தும், மனைவிமார்கள் தங்களது கணவருக்கு கனி கொடுத்தும் வாழ்த்துவார்கள்.
இந்த ஆண்டு சனிக்கிழமை அன்று ஈரோடு மனவளக்கலை மன்றம் சார்பில் இவ்விழா கொங்கு கலை அரங்கில் நடைபெற்றது. விழாவில் மனைவி நல வேட்பு அறிமுகவுரை
நிகழ்த்தி காந்தப் பரிமாற்ற தவம் முதுநிலை பேராசிரியர் எம். சதாசிவம் நடத்தி வைத்தார். சிறப்புரையாக தென்காசி பேராசிரியர் இராமச்சந்திரன், “மந்திர உறவு” என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். விழாவில் 300 க்கும் மேற்பட்ட தம்பதியர் உட்பட சுமார் 750-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர் .



