ஈரோடு, செப். 8 –
ஈரோடு தெற்கு மாவட்ட திமுக இளைஞர் அணி மற்றும் சூர்யா அறக்கட்டளை சார்பில் டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கான முதல் கட்ட பயிற்சி கடந்த 24 ந் தேதி தொடங்கியது. இதை அமைச்சர் முத்துசாமி தொடங்கி வைத்தார். இதை தொடர்ந்து 2 வது கட்ட பயிற்சி முகாமில் மக்கள் சிந்தனை பேரவை தலைவர் ஸ்டாலின் குணசேகரன் கலந்து கொண்டு பேசினார். 3-வது கட்ட பயிற்சி முகாமை சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட முன்னாள் போலீஸ் சூப்பிரண்டு கலியமூர்த்தி குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்து பேசினார். நிகழ்ச்சியில் ஏராளமான மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.
இவர்களுக்கு விவேகானந்தா ஐஏஎஸ் அகாடமி நிறுவனர் டாக்டர் கிருபாகரன் தலைமையில் பயிற்சி அளிக்கப்பட்டது. பிறகு மாணவ மாணவிகளுக்கு இலவசமாக டிஎன்பிஎஸ்சி புத்தகங்கள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஈரோடு கலை அறிவியல் கல்லூரி செயலாளர் டாக்டர் வெங்கடாசலம், முதல்வர் டாக்டர் சங்கர சுப்பிரமணியன் மற்றும் சூர்யா அறக்கட்டளை நிர்வாகி செந்தில் குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை ஈரோடு மாநகர் மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் திருவாசகம் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.



