கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே வெப்பாலம்பட்டி ஊராட்சியில் உள்ள வெப்பாலம்பட்டி டாக்டர்.APJ.அப்துல் கலாம் இளைஞர் சங்கத்தின் சார்பாக நினைவு அஞ்சலி செலுத்தப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை அப்துல்கலாம் இளைஞர் சங்கத்தின் உறுப்பினர்கள் சிறப்பான முறையில் செய்திருந்தனர். மேலும் இந்நிகழ்ச்சியில் வெப்பாலம்பட்டியை சேர்ந்த இளைய பாரதம் இளைஞர் நற்பணி மன்றத்தின் உறுப்பினர்களும் ஊர் பொதுமக்களும் கலந்துகொண்டு நினைவஞ்சலி செலுத்தினர். பின்னர் வெப்பாலம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியின் அருகில் அப்துல் கலாம் அவர்களின் நினைவு நாளையொட்டி மரக்கன்றுகள் நடப்பட்டது.



