தருமபுரி, ஆகஸ்ட் 5 –
தருமபுரி அடுத்த இலக்கியம்பட்டியில் உள்ள ஸ்ரீ சாலை மாரியம்மன் திருக்கோவிலில் ஆடி மாதத்தை முன்னிட்டு அம்மனுக்கு கூழ் ஊற்றும் விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இலக்கியம்பட்டி ஓம் சக்தி மன்றத்தின் சார்பில் 23-ம் ஆண்டு கூழ் ஊற்றும் விழா பாரதிபுரம் ஸ்ரீ விநாயகர் திருக்கோவிலில் இருந்து பொதுமக்கள் பூ கரகம், கூழ் எடுத்துக்கொண்டு ஊர்வலமாக ஜெகநாதன் கோவில் தெரு, பிள்ளையார் கோவில் தெரு, கீழ் மாரியம்மன் கோவில் தெரு, ஸ்கூல் தெரு ஆகிய பகுதியில் இருந்து பக்தர்கள் வந்து ஸ்ரீ சாலை மாரியம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்து கூழ் ஊற்றுதல் விழா நடைபெற்றது. இதில் இலக்கியம்பட்டி ஓம் சக்தி மன்றம், இலக்கியம்பட்டி இளைஞர்கள், பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.