ராமநாதபுரம், ஜூலை 22 –
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதியில் ஜூலை 31-ல் மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் வாகன பிரசாரத்திற்கு வரும் அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிச்சாமிக்கு வரவேற்பது அளிப்பது குறித்த ஆலோசனைக்கூட்டம்
முதுகுளத்தூர் மத்திய ஒன்றிய அதிமுக சார்பில் இன்று நடந்தது.
மத்திய ஒன்றிய செயலர் S.D. செந்தில்குமார் தலைமை வகித்தார். ராமநாதபுரம் மாவட்ட அதிமுக செயலர் M.A. முனியசாமி, எம்ஜிஆர் மன்ற துணை செயலர் M. சுந்தரபாண்டியன் ஆலோசனை வழங்கினர். தகவல் தொழில்நுட்ப பிரிவு விருதுநகர் மண்டல செயலர் சரவணக்குமார், மாவட்ட அம்மா பேரவை தலைவர் கதிரேசன், மத்திய ஒன்றிய அவைத் தலைவர் முத்துமணி, பரமக்குடி ஒன்றிய செயலர் கண்ணன், முதுகுளத்தூர் கிழக்கு ஒன்றிய செயலர் கருப்புச்சாமி உள்பட பலர் பங்கேற்றனர்.