மார்த்தாண்டம், ஆக. 18 –
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக கன்னியாகுமரி மாவட்ட தலைவர் ஜிஸ்திமுகமது கடந்த ஆறு நாட்களுக்கு முன் மாரடைப்பால் காலமானார். தேங்காபட்டணத்தில் உள்ள அவரது நினைவிடத்தில் நேற்று மாலை மனித நேய மக்கள் கட்சி மாநில தலைவர் ஜவாஹிருல்லா அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து இரங்கல் கூட்டத்தில் கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது: ஜிஸ்தி முகமது மறைந்தார் என்பது மிகவும் வேதனைக்கு உரியது. 1995 இல் தமுமுக துவங்கிய நேரம் முதல் சாதாரண தொண்டனாக இணைந்து சிறப்பாக களபணிகள்யாற்றியவர். மனித உரிமை தளத்தில் உரிமைகளை தட்டி கேட்டவர். அரசிடமிருந்து மக்களின் குறைகளை சம்மந்தப்பட்ட துறைகளுக்கு எடுத்து சென்று அதற்கான தீர்வுகளை காண உழைத்தவர். அவரது திடீர் இழப்பு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியாகும்.
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆதாரபூர்வமாக மிக தெளிவாக ஆதார பூர்வமாக எவ்வாறு பீகார் மாநிலத்தில் சிறப்பு தீவிர வாக்காளர் திருத்த பட்டியலில் நிகழ்வின் போது 65 லட்சம் வாக்காளர்கள் விடுபட்டதை பற்றி தெளிவாக குறிப்பிட்டார். அவர் செய்தியாளர்கள் சந்திப்பை நிகழ்த்திய பிறகு அவர் நடத்தியது தவறு என்றெல்லாம் பாஜக மற்றும் அவர்களது ஆதரவாளர்கள் பேசினார்கள். இறந்து போனவர்கள் என்று தேர்தல் ஆணையம் குறிப்பிட்ட அந்த வாக்காளர்களை தனது அருகில் நிறுத்தி தேனிர் குடித்து, இறந்து போனவர்கள் என்று தேர்தல் ஆணையத்தால் பிற்படுத்தப்பட்டவர்களுடன் தேனீர் குடிக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது என்ற புகைப்படங்கள் வெளியிட்டார்.
இந்த சூழ்நிலையில் தான் நமது நாட்டின் 79 வது சுதந்திர தின கொண்டாட்டத்தின் போது டெல்லி செங்கோட்டையில் உரையாற்றிய பிரதமர் மோடி ஒரு நாட்டின் பிரதமர் என்ற அடிப்படையில் பேசாமல் ஒரு சாதாரண அரசியல்வாதியை போல பல்வேறு கருத்துக்களை பேசி இருப்பது மிகுந்த வருத்தத்திற்கு உரியது. பல வரலாற்று தவறுகள் அந்த உரையில் அமைந்துள்ளது. ஆர்எஸ்எஸ் இன் பங்களிப்பு பற்றி கடந்த நூற்றாண்டுகள் இந்த நாட்டின் முன்னேற்றத்திற்கு பல்வேறு பங்களிப்பு செய்து இருக்கிறது என்று மோடி தனது உரையில் குறிப்பிட்டார். இந்தியாவிற்கு கிடைத்த சுதந்திர கொடியை விடுதலை போராட்ட வீரர்கள் அறிவித்த கொடியை ஆர்எஸ்எஸ் ஏற்று கொள்ளவில்லை. இது தான் அவர்கள் பங்களிப்பு.
கடந்த நூற்றாண்டுகளாக குறிப்பாக விடுதலைக்கு பிறகு இந்த நாட்டின் சமூக நல்லிணக்கம் மதச்சார்பின்மை இவற்றையெல்லாம் திட்டமிட்டு குலைந்து வர கூடிய பணியை செய்தது தான் ஆர்எஸ்எஸ். அவர்கள் விடுதலை போராட்டத்தில் பங்கு பெறவில்லை. இதை ஆர்எஸ்எஸ் தொண்டன் மோடி புகழ்ந்து பேசியது ஏற்புடையது அல்ல. அரசியல் சாசனம் படி பதவி பிரமாணம் செய்து இருக்கும் பிரதமர் இவ்வாறு பேசி இருக்க கூடாது.
தமிழக ஆளுநர் அடிக்கடி எதோ மோசமான கருத்துக்கள் பேசி வருகிறார். ஆளுநர் கருத்து மக்களை பிளவுபடுத்தும். இந்தியா பிரிவினை போது இந்திய முஸ்லிம்கள் இந்திய நாடு நம் நாடு என்று இருந்தார்கள். அப்படி போகும் போது ஆர்எஸ்எஸ் கவர்ணர் ஆர். ரெவி கொள்கை எந்த அளவுக்கு புகுத்தி விட்டார்கள் என்று எங்களாலும் நிருபிக்க முடியும் என்று பேட்டியின் போது அவர் தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட தலைவர் மகபூப் ஜெய்லானி, மாவட்ட பொறுப்பாளர் காதர் மைதீன், மாவட்ட செயலாளர் அபூபக்கர் சித்தீக், தேங்காபட்டணம் முஸ்லீம் ஜமாத், முன்னாள் நிர்வாக குழு உறுப்பினர் சவுக்கத் அலி மற்றும் உவைசு, அரபா நவாஸ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.



