சென்னை, மே – 05,
அதிமுக மாநில மாணவரணி எஸ்.ஆர்.விஜயகுமார் தலைமையில் சென்னை ஷெனாய்நகர் புல்லா அவென்யூ சென்னை மெட்ரோ அருகில் நீர்,மோர் பந்தல் திறக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் அதிமுக மாநில அமைப்புச் செயலாளார் டி.ஜெயகுமார் சிறப்பு அழைப்பாளராக கலந்து கலந்துகொண்டு திறந்து வைத்தார். மேலும் இந்நிகழ்ச்சியில் மாவட்ட, பகுதி, வட்ட நிர்வாகிகள், மகளிரணியினர் என பலர் கலந்து கொண்டனர். தேர்தல் பரப்புரையில் இட ஒதுக்கீடு பற்றி மோடி, அமித்ஷா ஆகியோர் பேசியதாக கூறப்பட்ட கருத்து பற்றி கேட்ட போது டி.ஜெயகுமார் பதிலளித்ததாவது:-
மோடி கூறிய கருத்து ஒருபுறம் இருக்கட்டும் .மண்டல் கமிஷன் பரிந்துரைபடி இடஓதுக்கீடு 50% மேல் இருக்ககூடாது என்று மத்திய அரசு அறிவித்த நிலையில் அன்று பிரதமராக பி.வி.நரசிம்மராவ் இருந்தார் . நான் மாநில பிற்பட்ட அமைச்சராக இருந்தேன். உடனடியாக முதல்வராக இருந்த அம்மா டெல்லிக்கு என்னையும் அழைந்து சென்றார். தமிழகத்தில் 69% இடஒதுக்கிட்டிற்கான முன்பிருந்த சட்ட த்தை சுட்டிக்காட்டி அனைத்துக்கட்சி சம்மததுடன் சட்டத்தில் திருத்தம் செய்து பாராளுமன்றத்தில் பெரும்பான்மை உறுப்பினர்களால் வெற்றி பெற செய்து,அதை அரசிதழில் வெளியிட்டு தமிழகத்திற்கு மட்டும் 69% இடஒதுக்கீட்டுக்கு பாதுகாப்பை உருவாக்கினார். அன்று வீரமணி அவர்களும் சமூக நீதி காத்த வீராங்கனை என்ற பட்டத்தை அம்மாவுக்கு அளித்தார். ஆகவே இட ஒதுக்கீட்டை எந்த அரசு வந்தாலும் தொட்டு கூட பார்க்க முடியாது. ஆகவே இடஒதுக்கீடு பற்றி யாரும் கவலையடைய தேவையில்லை என்றார்