மதுரை, ஜூலை 21 –
மதுரை மாவட்ட கோயில்களில் ஆடி வெள்ளிக்கிழமையை ஒட்டி கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. அந்த வகையில் அண்ணாநகர், தாசில்தார் நகர் சௌபாக்ய விநாயகர் ஆலயத்தில் ஆடி வெள்ளிக்கிழமை ஒட்டி வராஹி அம்மன், துர்க்கை அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பெண்கள் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் வைத்து வழிபட்டனர்.
இதே போல் மதுரை தாசில்தார் நகர் சித்தி விநாயகர் ஆலயத்தில் துர்க்கை அம்மனுக்கு கோயில் அர்ச்சகர் சிறப்பு அபிஷேகங்களை செய்தார். மதுரை வைகை காலனியில் உள்ள வைகை விநாயகர் ஆலயத்தில் ஆடி வெள்ளிக்கிழமை சிறப்பு பூஜைகளை அர்ச்சகர் காந்தன் செய்தார். இதில் கோயில் நிர்வாகிகள் முத்துக்குமார், மணிமாறன் ஆகியோர் சார்பில் பக்தர்களுக்கு பிரசாதங்களை வழங்கினர்.
அதே போல மதுரை ஆவின் சாத்தமங்கலம் அருள்மிகு பால விநாயகர் ஆலயத்தில் ஈஸ்வர பட்டர் சிறப்பு பூஜைகளை நடத்தி பக்தர்களுக்கு பிரசாதங்களை வழங்கினார்.
மதுரை அண்ணாநகர் யாணைக் குழாய் முத்து மாரியம்மன் ஆலயத்தில் பட்டர் மணி கண்டன் முத்து மாரியம்மனுக்கு சிறப்பு பூஜைகளை நடத்தினார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.