தருமபுரி, செப்டம்பர் 06 –
தருமபுரி கிழக்கு மாவட்ட திமுக சார்பில் மாவட்ட கட்சி அலுவலகத்தில் கழகத் தலைவர் மற்றும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆக்ஸ்போர்டு (Oxford) பல்கலைக்கழகத்தில் தந்தை பெரியார் அவர்களின் உருவப்படத்தை திறந்து வைத்து “சுயமரியாதை இயக்கம் மற்றும் அதன் மரபுகள் மாநாட்டில்” சிறப்புரை ஆற்றினார். இந்த வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வினை கழகத் தொண்டர்கள் கண்டுகளிக்கும் வகையில் பெரிய அளவிலான எல்.இ.டி (LED) திரைகளை அமைத்து ஒளிபரப்பு செய்யப்பட்டது. தருமபுரி கிழக்கு மாவட்ட கழக பொறுப்பாளர் ஆ. மணி எம்பி தலைமையில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் முன்னாள் மாவட்ட செயலாளர்கள் தடங்கம் சுப்பிரமணி, தர்ம செல்வன், ஒன்றிய செயலாளர்கள் சண்முகம், காவேரி, பெரியண்ணன், வீரமணி, வைகுந்தம், நகர செயலாளர் நாட்டான் மாது, கௌதம், உதயசூரியன், மே. அன்பழகன், முல்லவேந்தன், வெல்டிங் ராஜா, அன்பழகன், மாநில, மாவட்ட, ஒன்றிய, பேரூர் கழக நிர்வாகிகள், சார்பு அணி மாவட்ட நிர்வாகிகள், அணியின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் மற்றும் கழக முன்னோடிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.



