காஞ்சிபுரம், ஜூலை 03 –
காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் ஸ்ரீ சிவா விஷ்ணு நகரில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ சிவசக்தி செல்வ விநாயகர் ஆலயத்தின் ஜீரணேத்தாரண நூதன ஆலய அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது.
இவ்விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாக குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன், திருபெரும்புதூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கு. செல்வப்பெருந்தகை, குன்றத்தூர் நகரச் செயலாளர் நகராட்சி தலைவர் கோ. சத்தியமூர்த்தி, குன்றத்தூர் நகராட்சி துணைத்தலைவர் டி. திருநாவுக்கரசு, 22 வது வார்டு குன்றத்தூர் நகராட்சி மன்ற உறுப்பினர் மற்றும் வி. சாரங்கபாணி, ராஜி, அசோகன் மற்றும் விழா குழுவினர்கள், பக்தர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
வருகை புரிந்த அனைவருக்கும் சிறப்பு அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள் சார்பில் தெய்வசிகாமணி, மாரி, பாபு, அருணாச்சலம், சௌந்தர்ராஜன், பாண்டியன், சந்துரு, நாகலிங்கம், ஜெகதீசன், ரவிச்சந்திரன், விநாயகம், கோபாலகிருஷ்ணன், ஜெயராமன், சீதாராமன், சசிகுமார், யுவராஜ், சரவணன், முத்துக்குமார், தியாகராஜன், காளிதாஸ், வீராசாமி ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.