சென்னை, ஜூலை 16 –
அரும்பாக்கம் எம்.எம்.டி.ஏ காலனி சுற்று வட்டார நாடார் சங்கம் சார்பாக எம்.எம்.டி.ஏ பிரதான சாலையில் பெருந்தலைவர் காமராஜரின் 123-வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் பெருந்தலைவர் காமராஜரின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. மேலும் இந்நிகழ்ச்சியில் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவ செல்வங்களுக்கு கல்வி உதவித் தொகையாக ரூ.5ஆயிரமும் இப்பகுதியில் உள்ள துப்புரவு தொழிலாளர்களுக்கு புடவை, அரிசி, மளிகை தொகுப்பு நலத்திட்ட உதவிகளும் மேலும் 500 பேருக்கும் மேற்பட்டோருக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.
மேலும் அரும்பாக்கம் கே – 8 காவல் நிலையத்திற்கு பாதுகாப்பு உதவிக்காக ரூ.52 ஆயிரம் மதிப்பிலான சி.சி.டி.வி கேமாரா உபகரணங்களும் வழங்கப்பட்டன . அரும்பாக்கம் எம்எம்டிஏ காலனி சுற்றுவட்டார வியாபாரிகள் சங்கத் தலைவர் கே.கே. ஞானேஸ்வரன் செயலாளர் கே. சக்திவேல் அன்புராஜ் பொருளாளர் டி. ரிச்சர்ட் ஆகியோரின் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் சங்க நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.