By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: அமைச்சர் ராஜேஷ்குமாருக்கு எதிராக தவெக வேட்பாளர் சபின் திடீர் புகார்: வெற்றி செல்லாது என்று அறிவிக்க கேட்டு தேர்தல் அதிகாரிகளுக்கு புகார்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > அமைச்சர் ராஜேஷ்குமாருக்கு எதிராக தவெக வேட்பாளர் சபின் திடீர் புகார்: வெற்றி செல்லாது என்று அறிவிக்க கேட்டு தேர்தல் அதிகாரிகளுக்கு புகார்
அரசியல்கனஂனியாகுமரிதமிழ்நாடு

அமைச்சர் ராஜேஷ்குமாருக்கு எதிராக தவெக வேட்பாளர் சபின் திடீர் புகார்: வெற்றி செல்லாது என்று அறிவிக்க கேட்டு தேர்தல் அதிகாரிகளுக்கு புகார்

Last updated: June 9, 2026 6:48 pm
June 9, 2026
38 Views
Share
SHARE

நாகர்கோவில், ஜூன் 9 –

தமிழகத்தில் நடைபெற்று முடிந்த சட்டமன்றத் தேர்தலில் குமரி மாவட்டம் கிள்ளியூர் சட்டமன்ற தொகுதியில் திமுக கூட்டணியில் இடம் பெற்ற காங்கிரஸ் கட்சிக்கும் தவெக கட்சிக்கும் கடும் போட்டி நிலவியது. இதில் காங்கிரஸ் வேட்பாளர் ராஜேஷ்குமார் த வெக வேட்பாளர் சபின் ஆகியோர் வாக்கு எண்ணிக்கையின் போது மாறி மாறி முன்னிலை வகித்தபடி இருந்தனர். இதனால் இருவரில் யார் வெற்றி பெறுவார்? என்று எதிர்பார்ப்பு வாக்குப்பதிவு தொடங்கியது முதல் முடியும் வரை காணப்பட்டது. இறுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ராஜேஷ்குமார் 66,434 வாக்குகளும் தவெக வேட்பாளர் 65,123 வாக்குகளும் பெற்றனர். இதனால் 1,316 வாக்குகள் வித்தியாசத்தில் ராஜேஷ் குமார் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

அதே நேரத்தில் தமிழகத்தில் ஆட்சி அமைக்க தவெகவுக்கு போதிய மெஜாரிட்டி இல்லாத காரணத்தால் ஆட்சி அமைப்பதில் சிக்கல் ஏற்பட்டது. இந்த சூழலில் காங்கிரஸ் கட்சி திமுக கூட்டணியில் இருந்து வெளியேறி தவெக கூட்டணியில் இணைந்து, மேலும் சில கட்சிகள் ஆதரவு அளித்ததால் தவெக ஆட்சி அமைத்தது. இதில் கிள்ளியூரில் வெற்றி பெற்ற காங்கிரஸ் வேட்பாளர் ராஜேஷ்குமாருக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டது.

இந்த நிலையில் அமைச்சர் ராஜேஷ்குமாரின் வெற்றிக்கு எதிராக தேர்தலில் அவரை எதிர்த்து போட்டியிட்ட குமரி மேற்கு மாவட்ட த வெக செயலாளரான சபின் புகார் மனு அளித்துள்ளார். அவர் குமரி மாவட்ட தேர்தல் அதிகாரியாக செயல்பட்ட மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேரில் சென்று தனது புகார் மனுவை கொடுத்திருக்கிறார். மேலும் அவர் சட்டமன்றத் தேர்தல் அதிகாரி, மாநில தேர்தல் அதிகாரி, சட்டமன்ற செயலர் மற்றும் தலைமை தேர்தல் ஆணையருக்கும் தனது புகார் மனுவை கடிதமாக அனுப்பி உள்ளார்.

அவர் தனது மனுவில்: ஏராளமான தபால் வாக்குகள் எண்ணப்படவில்லை. ஒரு வாக்குச்சாவடியில் 6 மணிக்கு முன்னதாகவே வாக்குப்பதிவு தொடங்கியது. ஒரு வாக்கு சாவடியின் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டது. 5 சுற்றுகளின் வாக்கு எண்ணிக்கை வெளிப்படையாக நடக்கவில்லை. வாக்கு எண்ணிக்கை தொடர்பாக ஆட்சேபனைகள் தெரிவித்தும், அதிகாரிகள் முறையான விளக்கம் அளிக்காமல் தீர்வு காணாமல் இறுதி முடிவுகளை அறிவித்தனர்.. என்று பல்வேறு காரணங்களை தனது மனுவில் சபின் குறிப்பிட்டு உள்ளார்.

எனவே ராஜேஷ்குமாரின் வெற்றி செல்லாது என்று அறிவிக்க வேண்டும் என்று கேட்டுள்ளார். மேலும் இந்த விவகாரத்தில் நியாயம் கிடைக்க கோரி விரைவில் ஹைகோர்ட்டில் தேர்தல் வழக்கு தொடர போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். தேர்தலுக்கு முன் எதிரெதிர் அணியாக இருந்த தவெக மற்றும் காங்கிரஸ், தேர்தலுக்குப் பிறகு ஒரே அணியாக மாறி தற்போது தொடர்ந்து செயல்படும் நிலையில் அமைச்சர் ராஜேஷ்குமாருக்கு எதிராக தவெக நிர்வாகி புகார் மனு அளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

விளம்பரம்

You Might Also Like

கனிம வளங்களை ஏற்றி செல்லும் கனரக வாகனங்களை தடை செய்து நாகர்கோவில் மற்றும் மார்த்தாண்டம் பாலங்களை பாதுகாக்க வேண்டும்
குளச்சல் அருகே எம்.ஜி.ஆர் 109வது பிறந்தநாள் விழா: முன்னாள் அமைச்சர் பச்சைமால் மரியாதை
தலைமை அஞ்சலகத்தில் விழிப்புணர்வு
இந்தியா-ஆசியான் வர்த்தக கவுன்சிலின் வர்த்தகத் தூதராக சி.எம். விஷ்ணு பிரபு நியமிக்கப்பட்டுள்ளார்
களியக்காவிளையில் பள்ளத்தில் தவறி விழுந்த வாலிபர் பரிதாபமாக உயிரிழப்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தஞ்சாவூர்

விவசாய விளைநிலங்களுக்கு நடுவே தார் ஆலை

March 21, 2025
81 Views
மை பாரத் கேந்திரா தருமபுரி சார்பில் மாவட்ட அளவிலான போதை பழக்கத்திற்கு எதிரான போட்டிகள்
அண்ணாமலை கவுண்டர் தெருவில் விநாயகர் சதுர்த்தி
இந்திய மற்றும் உலக அஞ்சல் சங்கம் நடத்தும் கடிதம் எழுதும் போட்டி
வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்க சென்ற தென்காசி சட்டமன்ற உறுப்பினருக்கு உற்சாக வரவேற்பு!
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account