ஆரல்வாய்மொழி, ஆகஸ்ட் 9 –
தோவாளை ஒன்றியத்திற்கு உட்பட்ட செண்பகராமன்புதூர் ஊராட்சி பகுதியில் அமைந்துள்ள கட்டளை குளத்திலிருந்து அனுமதிக்கப்பட்ட அளவிற்கு அதிகமாக மண் எடுத்து சமூக விரோத செயலில் ஈடுபட்டவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க கோரி நாம் தமிழர் கட்சி சார்பாக ஆரல்வாய்மொழி காவல் நிலையத்தில் நேற்று மாலை புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் மாநில ஒருங்கிணைப்பாளர் தீபக் சாலமன், மண்டல செயலாளர் வழக்கறிஞர் பன்னீர்செல்வம், மாநில சுற்று சூழல் பாசறை துணை செயலாளர் ப. வேணுசந்தர், தோவாளை கிழக்கு மாவட்ட செயலாளர் வருண், தோவாளை கிழக்கு மாவட்ட செய்தி தொடர்பாளர் ஜான் ஜெப வெஸ்லி, செண்பகராமன்புதார் ஊராட்சி நிர்வாகி சுதாகர் மற்றும் தோவாளை நடுவண் மாவட்ட நிர்வாகி விஜேஷ் உடன் இருந்தனர். நிகழ்வில் மாநில மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர் மரிய ஜெனிபர் கலந்து கொண்டார்.