கொல்லங்கோடு, ஜூலை 4 –
கொல்லங்கோடு அருகே அடைக்காகுழி ஊராட்சி பகுதிக்கு உட்பட்ட புண்ணாகலை பகுதியில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் பராமரிப்பில் 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்தேக்க தொட்டி உள்ளது. இந்த கூட்டுக் குடிநீர் திட்டத்தின் மூலம் பல பகுதிகளுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இந்த நீர்த்தேக்க தொட்டியின் அருகில் குடியிருப்புகள் உள்ளன. தற்போது மேல்நிலை நீர்தேக்க தொட்டியில் கான்கிரீட் தூண்களில் உள்ள கான்கிரீட் கலவை பெயர்ந்து போய் நீர்தேக்க தொட்டி ஆபத்தான நிலையில் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறையினர் மேல்நிலை நீர்த்தக்க தட்டி பாதுகாக்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.