கிருஷ்ணகிரி, ஜுன் 28 –
கிருஷ்ணகிரி-பாண்டிச்சேரி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள முன்னாள் மிசா.ம. கமலநாதன் வீட்டின் முன்பாக அமைக்கப்பட்ட தி.மு.க புதிய கொடிக் கம்பத்தையும் டாக்டர் கலைஞர் கருணாநிதியின் 102-வது பிறந்தநாளை முன்னிட்டு நல திட்ட உதவிகளையும் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளர் தே. மதியழகன் எம்எல்ஏ தலைமையில் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட செயலாளர் ஒய். பிரகாஷ் எம்எல்ஏ முன்னிலையில் தி.மு.க துணைப்பொதுச் செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினர் மற்றும் குழுத்தலைவர் திருச்சி என். சிவா கலந்துகொண்டு தி.மு.க கொடியையேற்றி வைத்து நல திட்ட உதவிகளை துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார்.
முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் முருகன், பருகூர் ஒன்றிய கழக செயலாளர் அறிஞர், தலைமை செயற்குழு ஜெ.கே. கிருபாகரன், பொதுக்குழு உறுப்பினர் ஏ.சி. நாகராஜ், கிருஷ்ணகிரி நகர செயலர்கள் அஸ்லம், வேலுமணி, மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளர் எஸ். பாலாஜி, ஒன்றிய துணைச் செயலாளர் ராஜ் (எ) ராஜதுரை, ஒன்றிய பொருளாளர் குப்புசாமி, அரவிந்தன் உள்பட ஊர் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். மாவட்ட வழக்கறிஞர் அணித்துணை அமைப்பாளர் எஸ். வீரபாண்டியனார் இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தார்.