கன்னியாகுமரி மே 3
குமரி மாவட்டம் அஞ்சுகிராமத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற ஸ்ரீ அழகிய விநாயகர் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் (ஜோதிட ரீதியாக குரு பகவான் மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு இடம் பெயர்வதை குருபெயர்ச்சி என அழைக்கப்படுகிறது) குருபெயர்ச்சியை முன்னிட்டு ஸ்ரீ அழகிய விநாயகர் ஆலயத்தில் அமைந்துள்ள நவகிரக சன்னதியில் உள்ள குரு பகவானுக்கு அபிஷேகம் மற்றும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. அழகிய விநாயகர் ஆலய அறங்காவல் குழுத் தலைவர் வாரியூர் நடராஜன் தலைமையில், செயலாளர் காணிமடம் தங்கபாண்டி ஆசிரியர், பொருளாளர் மேட்டுக்குடி முருகன், செயற்குழு உறுப்பினர் வீடியோ குமார் ஆகியோர் முன்னிலையில் ஆலய குருக்கள் கணேசபட்டர் குரு பகவானுக்கு பால், பழம், பன்னீர், நெய், இளநீர் உள்ளிட்ட பொருள்களால் சிறப்பு அபிஷேகம், மற்றும் அலங்கார நவக்கிரக விக்கிரகங்கள் மற்றும் குரு பகவானுக்கு சிறப்பு பூஜையை நடத்தினார். தொடர்ந்து குருபகவானுக்கு வெற்றிலை, பாக்கு, தேங்காய், பழம், பூ, பன்னீர், சுண்டல், மஞ்சள் வஸ்திரம் ஆகியவற்றை வைத்து சிறப்பு பூஜை நடத்தினார். தொடர்நது நவகிரக பரிகார சாந்தி பூஜை மற்றும் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு கால பைரவருக்கும் சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனையும் நடத்தினார். இந்த பூஜையில் ஏராளமான பெண்கள் கலந்துகொண்டு நவதானிய தீபங்கள் ஏற்றி வழிபாடு செய்தனர். இதில் சுந்தரம் பிள்ளை, பரஞ்சோதி மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.
அஞ்சுகிராமம் ஸ்ரீ அழகிய விநாயகர் ஆலயத்தில் குருப்பெயர்ச்சியை முன்னிட்டு சிறப்பு நவக்கிரக பரிகார பூஜை.

Leave a comment