கன்னியாகுமரி, ஜூலை 10 –
குமரி மாவட்டம் அஞ்சுகிராமம் புது குடியிருப்பை சேர்ந்தவர் முத்து செல்வி. இவர் வீட்டில் கோழிகள் வளர்த்து வருகிறார். அடிக்கடி இவரது கோழிகள் காணாமல் போனது. இதனால் அதிர்ச்சி அடைந்தவர் கோழிகளை பாதுகாப்பதற்காக வீட்டை சுற்றி வலையை கட்டி வைத்திருந்தார்.
இந்நிலையில் நேற்று காலை சுமார் 9 மணி அளவில் வீட்டை சுற்றி பார்வையிட்டுக் கொண்டிருந்தார். அப்போது கோழிகளின் பாதுகாப்பிற்காக கட்டப்பட்ட வலையில் சுமார் 12 அடி நீளம் கொண்ட ராட்சத மலைப் பாம்பு ஒன்று சிக்கி தத்தளித்துக் கொண்டிருந்தது.
இது குறித்து அவர் அஞ்சுகிராமம் பேரூராட்சி கவுன்சிலர் ஜோஸ் திவாகருக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக அங்கு சென்று பார்வையிட்ட கவுன்சிலர் ஜோஸ் திவாகர் இதுகுறித்து வனத்துறைக்கு தகவல் தெரிவித்தார்.