போகலூர், ஆக. 16 –
ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினம் சாலை வெண்குளத்தில் அமைந்துள்ள ஷிபான் நூர் குளோபல் அகடெமி சி.பி.எஸ்.இ. பள்ளியில் 79-வது சுதந்திர தின விழா மற்றும் பள்ளி மாணவர்களுக்கான பதவியேற்பு விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இவ்விழாவில் மதுரையை சேர்ந்த வரலாற்று ஆய்வாளர் ராஜா கலந்துகொண்டு தேசியக்கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினார். பள்ளியின் தாளாளர் டாக்டர் மன்சூர், பள்ளியின் செயலாளர் டாக்டர் நூருல் ஹவ்வா ஆகியோர் முன்னிலை வகித்து சிறப்பு விருந்தினருக்கு நினைவு பரிசினை வழங்கினர். முதல்வர் அருள் ஜெகன் சிறப்பு விருந்தினருக்கு பொன்னாடை போர்த்தி கௌரவித்தார். மழலைகள் தேசத் தலைவர்களாக வேடமிட்டு அசத்தினர்.
அதனைத்தொடர்ந்து மாணவத்தலைவராக மாணவி ஜோஸ்லின், துணைத்தலைவராக மாணவி சப்ரின் நாச்சியார், விளையாட்டு செயலாளராக மாணவர் அபாபில், துணை செயலாளராக மாணவி அஸ்மியா பானு, அணித் தலைவர்களாக மாணவன் சூர்ய சினேகன், அல்மிஷார், அன்சர் கமால் சுல்கிப் ஆகியோர் பதவியேற்று கொண்டனர். முன்னதாக மாணவி யாழினி வரவேற்புரை ஆற்றினார். நிகழ்ச்சிகளை மாணவி நொவிலா தொகுத்து வழங்கினார். மாணவி ஹிபா நன்றி கூறினார். விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் துணை முதல்வர் சிவகுமார் செய்திருந்தார். உடன் ஒருங்கிணைப்பாளர்கள் சுஷ்மிதா மற்றும் மிஸ்பா, அலுவலக மேலாளர் சாகுல் ஹமீது, போக்குவரத்து மேலாளர் சீனி இப்ராஹிம்ஷா, ஆசிரியர்கள் ஆகியோர் உதவி புரிந்தனர்.



