நாகர்கோவில், ஜுலை 29 –
மக்களாட்சி நடத்தி வரும் தமிழக முதல்வர் விஜய்யின் நல்லாட்சியை பாராட்டும் விதத்தில் அகில இந்திய தமிழர் கழகத்தினர், நிறுவனர் முத்துக்குமார் தலைமையில் தங்கள் ஆதரவை தெரிவித்துள்ளனர். இதற்கான ஆதரவு கடிதத்தை தமிழக வெற்றிக் கழகத்தின் கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட செயலாளர் எஸ்.ஆர்.மாதவனிடம் சால்வை அணிவித்து வழங்கினார்கள்.
முன்னதாக அகில இந்திய தமிழர் கழகத்தின் நிறுவனர் முத்துக்குமாருக்கு, மாவட்ட செயலாளர் மாதவன் சால்வை அணிவித்து வரவேற்றார். இந் நிகழ்ச்சியில் அகில இந்திய தமிழர் கழகத்தின் நிர்வாகிகளான ராதாகிருஷ்ணன், குழந்தைசாமி, நாகேஸ்வரன், சஜு, மற்றும் சசி, சரவணன், விக்ரமன் உட்பட பலர் கலந்துக் கொண்டனர்.



