ஈரோடு, மே. 15
ஈரோடு பாராளுமன்ற தொகுதிக்கான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வாக்கு எண்ணும் மையமான சித்தோடு அரசினர் பொறியியல் கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளது அங்கு சட்டமன்ற தொகுதி வாரியாக பாதுகாப்பு அறையில் மின்னணு வாக்குப் பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டு மூன்று அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது
ஈரோடு மாவட்ட தேர்தல் அதிகாரியும் கலெக்டருமான ராஜகோபால் சுன்கரா வாக்கு எண்ணும் மையத்தில் வாக்கு எண்ணும் நாளான வருகிற 4 ந் தேதி அன்று மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆய்வு கொண்டார் மேலும் 6 சட்டமன்ற தொகுதிகளில் வாக்கு எண்ணும் மையங்களில் தேவையான குடிநீர் வசதி மின்சாரம் கழிப்பிடம் வாகனம் நிறுத்துமிடம் உணவு உள்பட அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்பட உள்ளதை பார்வையிட்டு ஆய்வு செய்தார்
இந்த ஆய்வின் போது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் கலெக்டரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) ரகுநாதன் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்



