பூதப்பாண்டி, ஜுலை 14 –
கீரிப்பாறையை அடுத்துள்ள வெள்ளாம்பி பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீமன் (18) இவர் ஆரல்வாய்மொழி பகுதியிலுள்ள ஒரு கல்லூரியில் பி.ஏ இரண்டாம் ஆண்டு பயின்று வருகிறார். இவரை கழிந்த சில தினங்களுக்கு முன்பு நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைகழகத்தில் பணிபுரியம் ஒரு பேராசிரியர் வாழ்வியல் மற்றும் கலாச்சாரம் கற்க வேண்டி இவருடைய வீடு இருக்கும் வெள்ளாம்பி பகுதிக்கு வந்து விட்டு திரும்பி செல்லும் சமயம் வனத்துறை ஊழியர்கள் இவர்களை வழிமறித்து விசாரித்ததாகவும் அப்பொழுது அவர்கள் நாங்கள் வனத்துறை அதிகாரிகளிடம் முறையாக அனுமதி பெற்று தான் இங்கு வந்துள்ளதாக கூறி அனுமதி கடிதத்தையும் காண்பித்த உடன் வனத்துறை ஊழியர்கள் சரிசெல்லுங்கள் என்று கூறியதும் ஸ்ரீமன் வீட்டிற்கு சென்று பின்னர் மூன்று மணியளவில் வாழையத் துவயல் செல்வதற்காக தனது பைக்கில் உறவினரான விபின் (22) என்பவரையும் கூட்டி செல்லும் போது வெள்ளம்பி கோவில் அருகே வரும் போது வழிமறித்து தாக்கியதாகவும் அதனால் பைக்கில் இருந்து கீழே விழுந்து காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதாகவும் இந்த சம்பவம் குறித்து கீரிப்பாறை காவல் நிலையத்திலும் வனத்துறை அலுவலகத்திலும் புகார் கொடுத்து இதுவரையிலும் சம்பந்தபட்டவரிடம் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காததை கண்டித்து வெள்ளாம்பி பொதுமக்கள் நேற்று காலை மறியல் செய்ய வந்தனர்.
இந்த சம்பவம் கேள்விப்பட்டு குலசேகரம் இன்ஸ்பெக்டர் கனகராஜ், அழகிய பாண்டியபுரம் வனச்சரக அலுவலர் கலையரசன் ஆகியோர் சம்பவ இடம் வந்து போராட்டகாரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர் மாவட்ட வன அலுவலரிடம் கூறி இதுக்கு ஒரு முடிவு செய்யலாம் இன்று மறியல் போராட்டம் வேண்டாம் என்று கூறினர் அதை ஏற்ற பொது மக்கள் அந்த இடத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினர் மேலும் வரும் திங்கள்கிழமை இவர்கள் மீது நடவடிக்கை எடுக்காத சமயம் செவ்வாய் கிழமை தடிக்காரன் கோணம் சந்திப்பில் மறியல் செய்வதாக கூறி சென்றனர்கள்