நாகர்கோவில், டிச. 16 –
நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட 45-வது வார்டு பூச்சிவிளாகம், மறுகால் தலைவிளை, பழவிளை, தாராவிளை, பூவன்குடியிருப்பு பகுதிகளை இணைக்கும் இணைப்பு பாலம் அமைக்க நாகர்கோவில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 15 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
அதனைத் தொடர்ந்து இன்று இணைப்பு பாலம் அமைக்கும் பணியை நாகர்கோவில் சட்டமன்ற உறுப்பினர் எம் ஆர் காந்தி தொடக்கி வைத்தார். நடைபெற்ற நிகழ்ச்சிக்கு நாகர்கோவில் மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் சதீஷ் தலைமை தாங்கினார்.
இந்நிகழ்வில் பாஜக மாநில செயலாளர் மீனாதேவ், நாகர்கோவில் மாநகராட்சி கவுன்சிலர்கள் ரமேஷ், சுனில்அரசு, ஐயப்பன், ஆன்றெனெட்ஸ்னைடா, மாவட்ட பொதுச் செயலாளர் சத்யாஶ்ரீ, ஊடக பிரிவு மாவட்ட தலைவர் சந்திரசேகர், அயலக பிரிவு துணை தலைவர் ஜாக்சன், மகளீர் அணி செயலாளர் மலர், சுற்றுச்சூழல் பிரிவு மாவட்ட செயலாளர் சீலராஜன் மற்றும் பூச்சிவிளாகம் முன்னாள் ஊர் தலைவர் மனோகரன், பிரம்மையா, பழவிளை ஊர் தலைவர் முருகேசன், செயலாளர் நாகராஜன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.



