முதுகுளத்தூர், ஆக. 3 –
முதுகுளத்தூரில் லட்சிய ஜனநாயக கட்சியின் சார்பில் மாற்றுக் கட்சியினர் இணைப்பு விழா ஞாயிற்றுக்கிழமை தனியார் திருமண மஹாலில் நடைபெற்றது. கட்சியின் நிறுவனர் தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின், MLA அவர்களின் வழிகாட்டுதலின்படி நடைபெற்ற இந்த விழா மாநில பொதுச் செயலாளர் நெல்லை ஜீவா முன்னிலையிலும், துணைப் பொதுச்செயலாளர் செல்வ மேரி மற்றும் மாவட்ட செயலாளர் சரவணகுமார் தலைமையிலும் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த 7,000-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் லட்சிய ஜனநாயக கட்சியில் இணைந்தனர்.
விழாவில் நெல்லை ஜீவா பேசுகையில், “ராமநாதபுரம் மாவட்டத்தை வளர்ச்சியடைந்த மாவட்டமாக மாற்றுவதற்கு லட்சிய ஜனநாயக கட்சி தொடர்ந்து பாடுபடும். கட்சியின் நிறுவனர் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின், மாவட்டத்தில் உள்ள பல்வேறு குளம், குட்டைகளை தூர்வாரும் பணிகளை மேற்கொண்டுள்ளார். மேலும், நாராயண காவிரி கால்வாய் திட்டத்தின் கீழ் 52 கிலோமீட்டர் தூர்வாரும் பணியும் ஏற்கனவே நிறைவு செய்யப்பட்டுள்ளது. இதுபோன்ற மக்கள் நலப் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும்,என்றார் இந்த நிகழ்ச்சியில் மாநில இளைஞரணி செயலாளர் அய்யனார் விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி ஒன்றிய செயலாளர் முனிராஜா மற்றும் கட்சி நிர்வாகிகள், ஒன்றிய மற்றும் நிர்வாகிகள், ஏராளமான கட்சி தொண்டர்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் ஒன்றிய செயலாளர் புளியங்குடி முத்துராமலிங்கம் ஏற்பாடு செய்தார்.



