மதுரை, ஜூலை 20 –
தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பணியாற்றி வரும் ஒப்பந்த தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி, ஒப்பந்த தொழிலாளர்கள் சார்பில் மதுரை மாவட்ட ஆட்சித் தலைவரிடம் மனு அளிக்கப்பட்டது.
மனுவில், நீண்டகாலமாக மின்சார வாரியத்தில் பணியாற்றி வரும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு நிரந்தர பணி வழங்க வேண்டும் என்றும், பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ள கோரிக்கைகளுக்கு அரசு உடனடியாக தீர்வு காண வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், 2020-ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட தேர்ச்சி பெற்றவர்களுக்கு வழங்கப்பட்ட சலுகைகளைப் போல, நீண்டகாலமாக பணியாற்றி வரும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கும் உரிய முன்னுரிமை வழங்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது.
அத்துடன், பணி பாதுகாப்பு, சம ஊதியம், சமூகப் பாதுகாப்பு உள்ளிட்ட தொழிலாளர் நலக் கோரிக்கைகளை அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்றும், என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



