தூத்துக்குடி, ஜூலை 3 –
தூத்துக்குடி மாவட்ட பாரா விளையாட்டுச் சங்கம் சார்பில் முதலாவது பாரா தடகள விளையாட்டு போட்டி கடந்த வாரம் தூத்துக்குடி தருவை விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் விளாத்திகுளம் அருகே கீழ் விளாத்திகுளம் கிராமத்தில் இயங்கி வரும் அக்லூட் சிறப்பு பள்ளியில் பயிலும் மாற்றுத்திறனாளி மாணவ-மாணவிகள் 100 மீ ஓட்டப்பந்தயம், குண்டு எரிதல் போட்டி, 200 மீட்டர் ஓட்டப்பந்தயம் உள்ளிட்ட போட்டிகளில் வெற்றி பெற்றனர். வெற்றி பெற்ற மாணவ – மாணவிகளுக்கு இன்றைய தினம் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் G.V. மார்க்கண்டேயன் அவர்கள் பதக்கங்கள் மற்றும் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கி வாழ்த்தினார்கள். நிகழ்வில் சிறப்பு பள்ளியின் நிறுவனர் தினேஷ் கனகராஜ் விளாத்திகுளம், மத்திய ஒன்றிய செயலாளர் ராமசுப்பு அவர்கள் மற்றும் விளாத்திகுளம் தெற்கு ஒன்றிய பொறுப்பாளர் இமானுவேல் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.