திருச்சி, மே 18 –
திருச்சி மாவட்டம் துறையூர் அருகே கொல்லப்பட்டியைச் சேர்ந்த பிச்சைமுத்து என்பவர், முருகேசன் தோட்டத்திலிருந்து முறையான அனுமதி இன்றி கிராவல் மண் ஏற்றிச் சென்றபோது, காவல் உதவி ஆய்வாளர் ராஜதுரையால் கைது செய்யப்பட்டார். அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. போலீசார் டிராக்டரை பறிமுதல் செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



