By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: திருப்புவனம் வைகை நதியில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க கூடிய மக்கள்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சிவகங்கை > திருப்புவனம் வைகை நதியில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க கூடிய மக்கள்
சிவகங்கை

திருப்புவனம் வைகை நதியில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க கூடிய மக்கள்

Last updated: September 22, 2025 12:36 pm
September 22, 2025
35 Views
Share
SHARE

திருப்புவனம், செப். 22 –

திருப்புவனம் வைகை ஆற்றங்கரையில் புரட்டாசி அமாவாசையை முன்னிட்டு பல்வேறு மாவட்டங்களில் இருந்து குடும்பத்துடன் ஏராளமான பொதுமக்கள் வருகை புரிந்து முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர். குறிப்பாக இங்குள்ள வைகை ஆற்றங்கரையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது விசேஷம் என கருதப்படுகிறது.

ராமேஸ்வரத்தை காட்டிலும் திருப்புவனத்தில் (திதி) கொடுப்பது மிகவும் விசேஷமாக இருக்கும் என்று விவரம் அறிந்தவர்களால் சொல்லப்படுவதால் மதுரை, விருதுநகர், சிவகங்கை, காரைக்குடி, மானாமதுரை மற்றும் சுற்றுவட்டார ஊர்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து தர்ப்பணம் கொடுத்து வருகின்றனர்.

அதிலும் குறிப்பாக தை, ஆடி, புரட்டாசி ஆகிய மகாளய அமாவாசை நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தர்ப்பணம் கொடுக்க வருவதுண்டு. அந்த வகையில் புரட்டாசி அமாவாசையை முன்னிட்டு அதிகாலை 5:00 மணியில் இருந்தே ஏராளமான பக்தர்கள் வைகை ஆற்றங்கரையில் குவிந்தனர். இதற்கு முன்னேற்பாடாக கொட்டகை அமைக்கப்பட்டு பக்தர்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர்.

சிவகங்கை மாவட்ட பாசன தேவைக்கு தண்ணீர் திறக்கப்பட்டதால் வைகை ஆற்றில் ஓரளவிற்கு நீரோட்டம் இருந்தது. பக்தர்கள் ஆற்றில் முன்னோர்களுக்கு தர்ப்பண பொருட்களை கரைத்து வழிபட்ட பின் புஷ்பவனேஸ்வரர் ஆலயத்தில் விளக்கேற்றி வழிபட்டனர். ஆற்றில் நீரோட்டம் இருந்ததால் தேரோடும் வீதியில் கொட்டகை அமைத்து வெளியூரில் இருந்து வருபவர்களுக்கு வெயில் இன்றி கொட்டகைகள் இருந்து முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர்.

இதற்கான ஏற்பாடுகளை மானாமதுரை தீயணைப்பு நிலைய அலுவலர் ரவிச்சந்திரன் தலைமையில் மீட்பு படை வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். திருப்புவனம் காவல் ஆய்வாளர் மற்றும் உதவி ஆய்வாளர்கள் மேற்பார்வையில் நிலைய போலீசார் வாகன ஒழுங்குபடுத்துதல் மற்றும் பாதுகாப்பு பணியில் சிறப்பாக ஈடுபட்டனர்.

விளம்பரம்

You Might Also Like

கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நகல் எரிக்கும் போராட்டம்
பாரதிய ஜனதா கட்சி என்பது கீழ் இழுக்கும் சக்தி
குழுமத்தின் சார்பாக 1.5 கோடி மதிப்பீட்டில் ஏழை
நேரில் சென்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கள ஆய்வு
வி. சி. கண்ணப்பன் கலந்து கொண்டு திறந்து வைத்தார்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

மூத்த குடிமக்களுக்கு ரயில் கட்டண சலுகை

March 19, 2025
44 Views
சிவகங்கையில் கலைஞர் நினைவு தினம் அனுசரிப்பு; உருவப் படத்திற்கு மாலையிட்டு மரியாதை
குமரி மாவட்டத்தில் கன்னிப்பூ சாகுபடிக்காகபேச்சுப்பாறை அணையில் இருந்து 850 கன அடி நீர் திறப்பு
வானகரம் புதிய காவல்நிலையம் திறப்பு
கருங்கல் அருகே ஓட்டி பார்ப்பது போல் காருடன் மாயமான ஆசாமிகள்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account