திருச்செந்தூர், ஆகஸ்ட் 16 –
தொடர் விடுமுறையை முன்னிட்டு திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் பக்தர்களின் கூட்டம் அதிகமாக வருவதை முன்னிட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் அவர்கள் இன்று திருச்செந்தூர் கோவிலுக்கு நேரில் சென்று காவல்துறையினரின் பாதுகாப்பு பணிகள் குறித்து ஆய்வு செய்து அறிவுரைகள் வழங்கினார்.
இந்த ஆய்வின் போது உடன் தூத்துக்குடி சைபர் குற்றப் பிரிவு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் சகாய ஜோஸ், திருச்செந்தூர் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் மகேஷ்குமார் மற்றும் திருச்செந்தூர் கோவில் இணை ஆணையர் ஞானசேகரன் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள், கோவில் பணியாளர்கள் உடனிருந்தனர்.



