திண்டுக்கல், ஆக. 4 –
திண்டுக்கல் யூனியன் கிளப் அரங்கில் பன்னாட்டு அரிமா சங்கம், ராக்போர்ட் அரிமா சங்கத்தின் 44-வது பதவியேற்பு விழா, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, புதிய உறுப்பினர்கள் இணைப்பு விழாவில் முன்னாள் மாவட்ட ஆளுநர்கள் Ln.Er.T. பாண்டியராஜன், PMJF,Ln.Dr.P. ரகுவரன் PMJF, Ln.Dr.T.P. ரவீந்திரன் MJF ஆகியோர் கலந்து கொண்டு புதிய நிர்வாகிகளை அறிமுகம் செய்து வைத்தனர்.
அதில் புதிய தலைவராக Ln.J.செந்தில்ராஜன், புதிய செயலாளராக Ln.PL.M.ரமேஷ், பொருளாளராக Ln.Ar.D.K. சந்தோஷ் ஆகியோர் பதவி ஏற்று கொண்டனர். இந்நிகழ்வில் முன்னாள் மாவட்ட ஆளுநர்கள் Ln.Er.T. பாண்டியராஜன், PMJF,Ln.Dr.P. ரகுவரன் PMJF, Ln.Dr.T.P. ரவீந்திரன் MJF, Ln.P.D. மோகன் சிங், Ln.Dr.N.M.B. காஜாமைதீன் PMJF, DPE (USA) , Ln.M.திபூர்சியஸ், Ln.R.குப்புசாமி ஆகியோர்களை கௌரவப்படுத்தும் வகையில் PMJF Ln.CA.SS.ரவீந்திரன் தலைமையில் ரோக் ஸ்டார் விருது பெற்றவருமான மண்டல தலைவர்
Ln.R. ஹரிஷ் வர்த்தன விக்னேஷ் ஆகியோர் பொன்னாடை போர்த்தி நினைவு பரிசு வழங்கி வாழ்த்தினார்கள்.
இந்நிகழ்வின் போது கல்வி உதவித்தொகை, விளையாட்டு ஊக்கத்தொகை, விளையாட்டு உபகரணங்கள் மற்றும் அரிசி மூட்டைகள் உட்பட பல்வேறு நலத்திட்ட உதவிகள் ரூபாய் 5 லட்சம் மதிப்பில் வழங்கப்பட்டது. இவ்விழாவில் ஏராளமான அரிமா சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தார்கள்.