திண்டுக்கல், அக் : 13
கன்னிவாடி வனச்சரகத்திற்கு உட்பட்ட தருமத்துப்பட்டி பகுதியில் கேளையாட்டு குட்டியை வேட்டையாடி கறி சமைத்ததாக இருவர் கைது செய்யப்பட்டனர்.
அவர்களிடமிருந்து 2 கிலோ இறைச்சி, அரிவாள், கன்னி வலை உள்ளிட்ட வேட்டைக் கருவிகளை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.



