By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியில் 1435ம் பசலிக்கான வருவாய் தீர்வாயம் 32 நபர்களுக்கு உடனடி தீர்வு: கலெக்டர் ரேவதி, அசோக்குமார் எம் எல் ஏ முன்னிலையில் வழங்கினார்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தஞ்சாவூர் > தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியில் 1435ம் பசலிக்கான வருவாய் தீர்வாயம் 32 நபர்களுக்கு உடனடி தீர்வு: கலெக்டர் ரேவதி, அசோக்குமார் எம் எல் ஏ முன்னிலையில் வழங்கினார்
தஞ்சாவூர்தமிழ்நாடு

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியில் 1435ம் பசலிக்கான வருவாய் தீர்வாயம் 32 நபர்களுக்கு உடனடி தீர்வு: கலெக்டர் ரேவதி, அசோக்குமார் எம் எல் ஏ முன்னிலையில் வழங்கினார்

Last updated: June 11, 2026 6:30 pm
June 11, 2026
25 Views
Share
SHARE

தஞ்சாவூர், ஜூன் 11 –

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி வட்டத்தில் 1435 ஆம் பசிலிக்கான வருவாய் தீர்வாயம் மாவட்ட கலெக்டர் ரேவதி, பேராவூரணி எம்எல்ஏ அசோக்குமார் முன்னிலையில் குடிகள் மாநாடு நடைபெற்றது.

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி வட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய் தீர்வாயம் , கிராம நிர்வாக அலுவலர்கள் மூலம் பராமரிக்கும் கிராம கணக்கு பதிவேடுகளில் ஆய்வு செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து தீர்வாயத்தில் பேராவூரணி வட்டத்தைச் சார்ந்த பேராவூரணி உள் வட்டத்தில் வருவாய் கிராமமான பின்னவாசல், ஆதனூர், நாட்டாணிக் கோட்டை, மணக்காடு, நெல்லியடிக் காடு, சாணாக்கரை, பேராவூரணி பகுதி 1, பேராவூரணி பகுதி 2, சொர்ணங்காடு பகுதிகளில் கூடுதல் வருவாய் கிராமமான படப்பனார்வயல், முடப்புளிக்காடு1 பீட், வீரக்குடி ரெட்டவயல், உக்கடை, கொரட்டூர், முடப்புளிக்காடு2 பீட் , ஆண்டார் கோட்டை, ரெங்கநாயகி புரம், சித்தாதிக்காடு, பனஞ்சேரி, வலப் பிரமன் காடுஆகிய பகுதிகளில் வருவாய் தீர்ப்பாயம் பசலி 1435 பொதுமக்களிடம் இருந்து வருவாய் துறை தொடர்பான 393 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் ஒப்படைக்கப்பட்டு விரைவில் தீர்வு காண நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட கலெக்டர் ரேவதி அறிவுறுத்தினார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் ரேவதி தெரிவித்ததாவது: தஞ்சாவூர் மாவட்டத்தில் அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும், வருவாய் தீர்ப்பாயம் நடைபெற்று வருகிறது. அதன் அடிப்படையில் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் தஞ்சாவூர் மாவட்டம் முழுவதும் கோடை காலத்தை முன்னிட்டு அனைத்து பகுதிகளிலும் சீரான அளவில் குடிநீர் வினியோகம் மேற்கொள்ளப்பட்டு வருகிறதா என்பது குறித்தும், மழைக்காலத்தை முன்னிட்டு மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தொடர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
வருவாய் தீர்வாயம் மற்றும் குடிகள் மாநாட்டில் விவசாயிகள் மற்றும் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்கள் மீது உரிய முறையில் விசாரணை மேற்கொண்டு, அனைவருக்கும் உரிய முறையில் பதில் அளிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என்று மாவட்ட கலெக்டர் தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி வட்டத்தில் 1435 ஆம் பசலிக்கான வருவாய் தீர்வாயத்தில் வருவாய் துறை சார்பில் குடிகள் மாநாடு தினத்தன்று 22 நபர்களுக்கு உடனடியாக தீர்வாக இணையவழி பட்டாக்களையும், குடும்ப அட்டைகள் 4 எண்ணிக்கையும், 4 நபர்களுக்கு பட்டா மாற்றம் உட்பிரிவு ஆணைகளையும் நெற்பயிற் நுண்ணூட்டம் 2 நபர்களுக்கும் ஆக மொத்தம் 32 நபர்களுக்கு மாவட்ட கலெக்டர் ரேவதி பேராவூரணி எம்எல்ஏ அசோக்குமார் ஆகியோர் முன்னிலையில் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியின் போது உதவி கலெக்டர் (பயிற்சி) சுபாஷ் கார்த்திக், உதவி இயக்குனர் (நில அளவை) வேங்கட கிருஷ்ணன், பேராவூரணி வட்டாட்சியர் பாலசுப்பிரமணியன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

குறும்பனை கடற்கரை பகுதியில் கடலில் மூழ்கிய பள்ளி மாணவி: 2ம் நாளாக தேடும் பணி தீவிரம்
தருமபுரி மாவட்டத்தில் கள்ளச்சாராயம் போதைப்பொருள் மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் ஒழிப்பு தொடர்பாக அதிகாரியுடன் ஆட்சியர் ஆய்வு கூட்டம்
மீனாட்சி மருத்துவமனையில் வெற்றிகரமாக நடந்த அறுவை சிகிச்சை
24/7 மக்கள் பணி செய்து வருபவர்கள் மீது அவதூறு பரப்பும் சமூக வலைதளங்கள் : எஸ்பி ஸ்டாலின் நடவடிக்கை எடுப்பாரா?
நாகர்கோவில் குட்கா வழக்கில் கைதான வாலிபர் சிறையில் திடீர் சாவு: உறவினர்கள் போராட்டம்: எஸ்பி பேச்சுவார்த்தை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
சிவகங்கை

தொப்புள் கொடி உறவான பாஜக மாநில தலைவருக்கு நன்றி; அதிமுக பிரமுகரால் ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு

October 14, 2025
79 Views
இருசக்கர வாகனங்களை திருடிய 2 இளைஞர்கள் கைது
புதுக்கடை அருகே வாய்க்காலில் குளித்துக் கொண்டிருந்த பெண்ணின் கழுத்தில் கிடந்த தங்க செயின் பறிப்பு
முதியோர் இல்லத்தில் கேக் வெட்டி கொண்டாடிய தளவாய் சுந்தரம் எம்எல்ஏ
கல்லூரியில் (தன்னாட்சி) 49வது பட்டமளிப்பு விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account