கோவை, செப். 27 –
கோவை வடவள்ளி சாலை, பாப்பநாயக்கன்புதூர் மணிப்பிரியா மஹால் நடைபெற்றது. இம்முகாமிற்கு சிறப்பு விருந்தினராக மாநகர மாவட்ட செயலாளர் நா. கார்த்திக் கலந்து கொண்டு முகாமினை துவக்கி வைத்தார். கோவை மாநகராட்சி மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன், கோவை மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன் முகாமினை நேரில் சென்று பார்வையிட்டார். கோவை மாநகர் மாவட்டம் திமுக பாப்பநாயக்கன்புதூர் பகுதிக் கழக செயலாளர் பரணி கே. பாக்யராஜ் தலைமை தாங்கினார்.
இம்முகாமானது 14 துறைகளில் மூலம் சார்பில் 43 சேவைகளை கொண்டு நடைபெற்றது. இதில் மகளிர் உரிமை தொகைக்கென பிரத்தியேகமாக அரங்குகள் அமைக்கப்பட்டது. கலைஞர் மகளிர் உரிமைத்தொகை பெற தகுதியுள்ள மற்றும் விடுபட்ட பெண்களுக்கு அதற்காக அமைக்கப்பட்ட சில அரங்குகளில் அமைக்கப்பட்டிருந்தது. மேலும் மின்சார துறை சார்பில் ஏ.இ. விக்னேஷ் தலைமையில் 10க்கும் மேற்பட்ட மனுக்களுக்கு பெயர் மாற்றம் செய்யப்பட்டு உடனடி ஆணை வழங்கப்பட்டது. ஒரு சில மனுக்களுக்கு உடனடி தீர்வும் வழங்கப்பட்டது.
இதில் 41-வது வார்டு மாமன்ற உறுப்பினர் சாந்தி சந்திரன், வார்டு செயலாளர்கள் தம்பி சண்முகம், நித்யானந்தம், விஸ்வநாதன், மேற்கு மண்டலம் உதவி ஆணையர் துரைமுருகன் மற்றும் உதவி வருவாய் அலுவலர் மற்றும் அனைத்து துறை அதிகாரிகள், பொது மக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.



