கோவை, ஜூலை 11 –
கோவை மாவட்டம் சுந்தராபுரம் பகுதியில் வீட்டுக்கான அனைத்தும் ஒரே பகுதியில் கிடைக்கும் வகையிலான 70 ஆயிரம் சதுர அடியில் பிரமாண்டமான சேரா ஹோம் ஜங்ஷன் ஷோரூம் திறப்பு விழா நடைபெற்றது. இதில் சேரா ஹோம் ஜங்ஷன் நிர்வாக இயக்குனர் ஜோஸ் டைசன் மார்டின் குத்துவிளக்கு ஏற்றி வைத்தார். சேரா ஹோம் ஜங்ஷன் இயக்குனர் ஜார்ஜ் மார்ஷல், நடிகர்கள் அசோக் செல்வன், பிரியா வாரியர் ஆகியோர் பங்கேற்றனர். சேரா ஹோம் ஜங்ஷன் வானம் பர்னிஷிங்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் புதிய முயற்சியாக திறக்கப்பட்டது.
இந்த ஷோரூம் வீட்டு உபயோகப் பொருட்கள் அனைத்தையும் ஒரே இடத்தில் கிடைக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் கட்டிட உபகரணங்கள், பர்னிச்சர், மின் உபகரணங்கள், ஹோம் அப்ளையன்ஸ்கள், டைல்ஸ், சானிட்டரி பொருட்கள் என அனைத்தும் குறைந்த விலையில் சிறந்த தரத்துடன் கிடைக்கிறது.
வீடு, அலுவலகம், நிறுவனங்களுக்கு தனிப்பயன் தயாரிப்பு பகுதியின் மிகப்பெரிய மெத்தை சேகரிப்பு, விரைவில் மொபைல்கள், லேப்டாப்கள் மற்றும் மின் சாதனங்கள், ஆப்பிள், சாம்சங், எல்.ஜி, ஹையர், ஜியோமி, லெனோவா, டெல் போன்ற பிராண்டுகளின் சமீபத்திய மாடல்கள் உள்ளன. சமையலறை மற்றும் வீட்டு உபகரணங்கள் முழுமையாக உள்ளன.
சிறப்பு தொடக்க சலுகையாக ரூ.25 ஆயிரத்திற்கும் அதிகமாக வாங்கினால் தங்கம் மற்றும் வெள்ளி நாணயம் இலவசம். ஒவ்வொரு பொருட்களுக்கும் பரிசு உள்ளது. ஸ்லோகன் போட்டியில் வென்றால் புதிய கார் வெல்லும் வாய்ப்பு உள்ளது. ஒவ்வொரு வீட்டுக்கும் தரமான பொருட்களை எளிதாகவும், குறைந்த விலையிலும் வழங்கும் வகையில் சேரா ஹோம் ஜங்ஷன் தொடங்கப்பட்டு உள்ளது.