கொல்லங்கோடு, ஜூலை 4 –
கொல்லங்கோடு அருகே பாத்திமா நகர் பகுதியை சேர்ந்தவர் முருகன் (59). தச்சு வேலை செய்து வந்தார். இவருக்கு கலா என்ற மனைவியும் பிள்ளைகளும் உள்ளனர். முருகனுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்துள்ளது. நேற்று முன்தினம் மாலை வீட்டில் உள்ளவர்கள் ஒரு திருமண நிகழ்ச்சிக்கு சென்று இருந்தனர். அப்போது முருகன் வீட்டில் உள்ள ஒரு அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இரவில் வீட்டிற்கு திரும்பி வந்தவர்கள் முருகன் தூக்கில் தொங்கியதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து கொல்லங்கோடு போலீசருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.