குளச்சல், ஜுலை 3 –
குளச்சல் அருகே இளப்ப விளை என்ற கிராமத்தில் சுலைமான் (75) என்பவர் கடை நடத்தி வருகிறார். அவர் கடையில் அந்த பகுதியில் உள்ள உயர்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவ மாணவிகள் பொருட்கள் வாங்கி வந்துள்ளனர். இதற்கு இடையே கடந்த 18-ம் தேதி பள்ளியில் ஆறாம் வகுப்பு படிக்கும் 11 வயது சிறுமி கடை வழியாக சென்றுள்ளார். அப்போது சிறுமியிடம் பேச்சுப் கொடுத்த சுலைமான், மாணவியை கடைக்கு அழைத்து சாக்லெட் கொடுத்துள்ளார். சிறுமி சாக்லேட் வாங்க மறுத்துள்ளார். அந்த நேரம் கடையில் யாரும் இல்லாததை பயன்படுத்தி சுலைமான் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
அதன் பிறகு மாணவி நடவடிக்கையில் மாற்றம் ஏற்பட்டதை கவனித்த பெற்றோர் மகளிடம் விசாரித்துள்ளனர். அப்போது சிறுமி தந்தையிடம் கடையில் சுலைமான் பாலியல் தொல்லை கொடுத்ததை கூறி உள்ளார். தந்தை குளச்சல் அனைத்து மகளிர் போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் தனலட்சுமி பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சுலைமான் மீது நேற்று போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து தலைமறைவான சுலைமானை தேடி வருகின்றனர்.