கன்னியாகுமரி, செப். 10 –
கலைஞரின் 102 வது பிறந்த நாளை ஒட்டி கன்னியாகுமரி ரயில் நிலையம் அருகே அமைந்துள்ள ஆதரவற்றோர் இல்லத்தில் உடற்பயிற்சி உபகரணங்கள் மற்றும் அன்னதானம் திமுக சார்பில் வழங்கப்பட்டது.
கலைஞரின் 102- ஆவது பிறந்த நாளையொட்டி கன்னியாகுமரி ரயில் நிலையம் அருகே அமைந்துள்ள ஆதரவற்றோர் இல்லத்தில் உடற்பயிற்சி உபகரணங்கள் கிழக்கு மாவட்ட தி.மு.க சார்பில் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு திமுக கிழக்கு மாவட்ட செயலாளரும் மாநகராட்சி மேயருமான மகேஷ் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் பாபு முன்னிலை வகித்தார். கன்னியாகுமரி திமுக சிறுபான்மையினர் பிரிவு மாவட்ட துணை அமைப்பாளர் நிஷார் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் திமுக கவுன்சிலர்கள் மற்றும் உறுப்பினர்கள் திரளானோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி முடிவில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.


