By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: உலக சுற்றுச்சூழல் தினத்தில் நாகர்கோவில் எஸ்.எல்.பி அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நட்ட கலெக்டர்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > உலக சுற்றுச்சூழல் தினத்தில் நாகர்கோவில் எஸ்.எல்.பி அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நட்ட கலெக்டர்
கனஂனியாகுமரிதமிழ்நாடு

உலக சுற்றுச்சூழல் தினத்தில் நாகர்கோவில் எஸ்.எல்.பி அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நட்ட கலெக்டர்

Last updated: June 5, 2026 4:59 pm
June 5, 2026
40 Views
Share
SHARE


நாகர்கோவில், ஜூன் 5 –

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, கன்னியாகுமரி மாவட்ட பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் அனைத்து பள்ளி வளாகங்களிலும் மரக்கன்றுகள் நடும் விழா இன்று 5-ம் தேதி நடைபெற்றது. நாகர்கோவில் எஸ்.எல்.பி அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்ற மரக்கன்றுகள் நடும் விழாவில் மாவட்ட மாவட்ட ஆட்சித்தலைவர் மு.பிரதாப் கலந்துகொண்டு மரக்கன்றுகளை நடவு செய்தார்.

பின்னர் அவர் கூறியதாவது: தமிழ்நாடு அரசு பசுமை தமிழ்நாடு திட்டத்தினை தீவிரமாகச் செயல்படுத்தி வருகிறது. ஏற்கனவே பசுமை சூழல் நிறைந்த கன்னியாகுமரி மாவட்டத்தில், அந்தச் சூழலைத் தக்கவைக்கவும், மேலும் மேம்படுத்தவும் பல்வேறு திட்டங்கள் மாவட்ட நிர்வாகத்தால் முன்னெடுக்கப்பட்டுள்ளன. மேலும் ​பள்ளி, கல்லூரிகளில் பசுமைச் சூழலை அதிகப்படுத்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மூலம் அனைத்துப் பள்ளிகளுக்கும் மரக்கன்றுகள் நட அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, பள்ளிகளில் மரக்கன்றுகள் நடுதல் மற்றும் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு நிகழ்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு பள்ளியிலும் சிறப்பாகச் செயல்பட்டு வரும் ‘பசுமைப் படையை மேலும் வலுப்படுத்த வாரம் ஒருமுறை 15 நிமிடங்கள் மாணவர்களுக்குப் புவி வெப்பமயமாதல் குறித்தும், அதனால் ஏற்படும் விளைவுகள் குறித்தும் விழிப்புணர்வை ஏற்படுத்த தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இளம் வயதிலேயே மாணவர்களுக்குச் சுற்றுச்சூழலின் முக்கியத்துவத்தை உணர்த்துவதன் மூலம், எதிர்காலத்தில் அவர்கள் மேற்கொள்ளும் அனைத்து வளர்ச்சிப் பணிகளிலும் பசுமையை ஒரு கருத்தாகக் கொண்டு செயல்படுவார்கள். ​இந்த நிகழ்வு பள்ளிகளில் மட்டுமின்றி, மாவட்டம் முழுவதும் தொடர்ந்து நடைபெறும். மாணவர்கள் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் தங்களை ஈடுபடுத்திக்கொண்டு, தங்கள் வீடுகள் மற்றும் நண்பர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் தூதுவர்களாகச் செயல்பட வேண்டும்.​ இவ்வாறு கலெக்டர் கூறினார்.

முன்னதாக மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதாப், நாகர்கோவில் எஸ்.எல்.பி அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நட்டு, சுற்றுச்சூழல் விழிப்புணர்வு உறுதிமொழியினை மாணவ மாணவியர்கள் உட்பட அனைவரும் ஏற்றுக்கொண்டார்கள்.

நடைபெற்ற நிகழ்ச்சியில் உதவி ஆட்சியர் பயிற்சி ர.மோனிகா, மாவட்ட கல்வி அலுவலர் தனியார் பள்ளிகள் அஜிதா, எஸ்.எல்.பி அரசு மேல்நிலைப்பள்ளி கிஷோர், ஆசிரியர்கள், மாணவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.

விளம்பரம்

You Might Also Like

அகஸ்தீஸ்வரம் வட்டார அளவிலான வாலிபால் போட்டியில் தென்தாமரைகுளம் எல்.எம்.எஸ். மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் முதலிடம்
சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ரீல்ஸ் போட்டி
பதி சித்திரைத் திருவிழா கொடியேற்ற தொடங்கியது
பரமக்குடியில் எஸ் ஐ ஆர் பணிகள் முறையாக நடைபெறவில்லை; நகராட்சியை முற்றுகையிட்ட அதிமுகவினர்
நாகர்கோவிலில் உதயநிதியை கண்டித்து த.வெ.க.வினர் ஆர்ப்பாட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கிருஷ்ணகிரிமாவட்டம்

குழந்தைகளுக்கு தொற்றுநோய் ஏற்படும் அபாயம்

December 17, 2024
62 Views
நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் போது அதை ஆவணப்படுத்த வேண்டும்: அரசு ஆயுர்வேதா கல்லூரி முதல்வர் அறிவுரை
விபத்தில் காயம் , பைக்கில் அழைத்துச் சென்ற மருமகன் மீது மாமியார் புகார்
நுகர்வோர் பாதுகாப்பு , விழிப்புணர்வு நடைப்பயணம்
நெடுஞ்சலையில் நாற்று நடும் போராட்டத்திற்க்கு அனுமதி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account