உலகம் , அக் : 22,
தென் ஆப்பிரிக்கா – ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கெபர்ஹாவில் நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்ஸில் தென் ஆப்பிரிக்க அணி 9 விக்கெட் இழப்புக்கு 425 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. கேப்டன் தெம்பா பவுமா 179 ரன்கள் குவித்தார்.
இதையடுத்து விளையாடிய ஆஸ்திரேலிய அணி 99 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனதால் ஃபாலோ-ஆன் பெற்றது. 2-வது இன்னிங்ஸில் 4 விக்கெட் இழப்புக்கு 156 ரன்கள் எடுத்திருந்த ஆஸ்திரேலிய அணி, தென் ஆப்பிரிக்காவை விட 170 ரன்கள் பின்தங்கிய நிலையில் கடைசி நாள் ஆட்டத்தை எதிர்கொள்கிறது.



