தேனி, ஜூலை 25 –
தேனி மாவட்டம் தேனி புதிய பேருந்து நிலையம் அருகே கடந்த சில தினங்களுக்கு முன்பாக நில தகராறில் தடுப்புச் சுவர்கள் மற்றும் புதிய கட்டிடங்களை சேதப்படுத்தியவர்கள் மீது காவல் துறையிடம் முறையாக புகார் அளித்துள்ளனர். இதனிடையே காவல் துறையினர் உரிய நடவடிக்கை எடுக்காமல் எதிர்மனுதாரிடம் பொய்யான புகார் பெற்றுக்கொண்டு வழக்கறிஞர்கள் மீது வழக்கு பதிவு செய்த காவல் துறையை கண்டித்து நேற்று நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் இன்று வழக்கறிஞர்கள் மீது போடப்பட்ட பொய் வழக்கை காவல்துறையினர் ரத்து செய்யும் வரை தொடர் நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டதோடு நீதிமன்ற வளாகத்தின் முன்பாக அமர்ந்து தொடர் உள்ளிருப்பு போராட்டத்தையும் தொடங்கியுள்ளனர்.
மேலும் காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுத்து கட்டிடங்களை சேதப்படுத்திய நபர்களை கைது செய்யவும் வழக்கறிஞர்கள் மீது போடப்பட்ட பொய்யான புகாரை ரத்து செய்யும் வரை நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபடுவதோடு நீதிமன்றத்தில் உள்ளிருப்பு போராட்டத்தை இரவு பகலாக போராட்டத்தை நடத்த உள்ளதாக தெரிவித்துள்ளனர்.