புளியங்குளம், ஆகஸ்ட் 1 –
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றியம் புளியங்குளம், அயன் செங்கல்படை, பூசனூர், வள்ளிநாயகிபுரம், மார்த்தாண்டப்பட்டி, ஜமீன்செங்கல்படை, வீரபாண்டியபுரம், T. சுப்பையபுரம் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் பயன்பெறும் வகையில் புளியங்குளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாமை விளாத்திகுளம் எம்எல்ஏ மார்கண்டேயன் துவக்கி வைத்து பார்வையிட்டார்.
மேலும் வருவாய்துறை சார்பில் பயனாளிகளுக்கு பட்டா பெயர் மாற்றுதல், மின்வாரியத்துறை சார்பில் பெயர் மாற்றுதல் ஆணை, மக்களை தேடி மருத்துவ திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு மருந்து பெட்டகம், மருத்துவத்துறை சார்பில் கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கி சிறப்புரையாற்றினார்.
இந்நிகழ்வில் விளாத்திகுளம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரஞ்சித், தங்கவேல், விளாத்திகுளம் வட்டாட்சியர் கண்ணன், சமூக பாதுகாப்பு திட்ட வட்டாட்சியர் விமலா,
துணை வட்டாட்சியர் பொன்னம்மாள், விளாத்திகுளம் ஒன்றிய செயலாளர்கள் இம்மானுவேல், அன்புராஜன், புளியங்குளம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஜெயலட்சுமி ராஜகோபால் உள்ளிட்ட பொதுமக்கள், துறை சார்ந்த அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.