சென்னை, ஜூலை 04 –
இந்தியாவின் உள்கட்டமைப்பு வளர்ச்சிக்கு வலுவூட்ட பாரத்பென்ஸ் நிறுவனம் டெய்ம்லர் டிரக் ஏஜி நிறுவனத்துடன் இணைந்து இரண்டு புதிய மாடல்களில் எச்.எக்ஸ் மற்றும் டார்க்ஷிஃப்ட் என்ற பெயர்களில் கட்டுமானம் மற்றும் சுரங்கத்துறையில் சுமைகளை கையாளும் வாகனங்களை தமிழகத்தில் அறிமுகப்படுத்தியுள்ளது.
டெய்ம்லர் இந்தியா வணிக வாகனங்கள் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான சத்யகம் ஆர்யா கூறுகையில்: வளர்ந்து வரும் இந்திய தொழில் வளர்ச்சிக்கு ஏற்ப தேவைப்படும் கட்டுமான மற்றும் சுரங்கத் துறைகளில் வாடிக்கையாளர் விருப்பத்திற்கு ஏற்ப சோதனை இயக்க நேரம், செயல்பாட்டுத் திறன், இலாபத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களை காட்டும் அனைத்து அம்சங்களிலும் பாரத் பென்ஸ் சிறந்து விளங்குகிறது.
பாரத்பென்ஸ் கட்டுமானம் மற்றும் சுரங்க வரிசையில் பின்வருவன அடங்கும். கனரக சுமை கட்டுமான வாகனங்கள் 2828சி எச்.எக்ஸ் மற்றும் 3532சி எச்.எக்ஸ் மாடல்களைக் கொண்ட எச்.எக்ஸ் தொடர், அதீத நீடித்து உழைக்கும் தன்மை, வகுப்பில் முன்னணி உற்பத்தித்திறன், ஒப்பிடமுடியாத எரிபொருள் சேமிப்பு திறன் மற்றும் சிறந்த ஓட்டுநர் திறன் ஆகியவற்றிற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
வணிக வாகனங்களின் தலைவர் பிரதீப் குமார் திம்மையன் கூறுகையில்: இந்தியாவின் கட்டுமானம் மற்றும் சுரங்கத் துறைகளில் நம்பகமான கூட்டாளியாக பாரத்பென்ஸ் தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளது. நாடு தழுவிய முக்கிய உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு இந்த வாகனங்கள் பங்களிக்கின்றன. இந்தியா அதன் உள்கட்டமைப்பு வளர்ச்சியை துரிதப்படுத்துகையில் பாதுகாப்பு, தரம் மற்றும் நம்பகத்தன்மை ஆகியவற்றின் மிக உயர்ந்த தரங்களைப் பராமரிக்கும் புதுமையான தீர்வுகள் மூலம் இந்த வளர்ச்சியை ஆதரிப்பதில் நிறுவனம் உறுதியாக உள்ளது என்றார்.