கிருஷ்ணகிரி, ஜூலை 3 –
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரில் ஸ்ரீ பாலமுருகன் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம் விழா நடந்தது. இவ்விழாவில் மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார், பர்கூர் சட்டமன்ற உறுப்பினர் மதியழகன் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தார்.
இந்த நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் ராமுவேல், பேரூராட்சி தலைவர் சந்தோஷ் குமார், அரங்காவல் குழு தலைவர் ரவிச்சந்திரன், அறநிலையத்துறை ஆய்வாளர் சிவக்குமார், கிளர்க் கார்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பர்கூர் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு முருகப்பெருமானை வழிபட்டனர். கோவில் நிர்வாகத்தின் சார்பில் பக்தர்களுக்கு அறுசுவையுடன் உணவு மற்றும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கப்பட்டது. இதில் பர்கூர் காவல் ஆய்வாளர் இளவரசன் தலைமையில் உதவி காவல் ஆய்வாளர்கள், காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.