நாகர்கோவில், ஏப்ரல் 9 –
நாகர்கோவில் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட புத்தேரி பகுதி மக்களை தவெக வேட்பாளர் பெர்வின் கிங்ஸ் சந்தித்து விசில் சின்னத்திற்கு ஆதரவு திரட்டினார். கன்னியாகுமரி மாவட்டத்தில் தமிழக வெற்றி கழகத்திற்கு நாளுக்கு நாள் மக்கள் பேராதரவு பெருகி வருகிறது. இந்நிலையில் நாகர்கோவில் பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வரும் நாகர்கோவில் தொகுதி வேட்பாளர் பெர்வின் கிங்ஸ் 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் ஆளுங்கட்சிக்கு எதிரான அதிரடிப் பிரச்சாரம் செய்து வருகிறார்.
மகளிருக்கு மாத நிதி உதவி, எல்பிஜி சிலிண்டர், ஏழை மணப்பெண்களுக்குத் தங்கம், மற்றும் கல்வி உதவி போன்ற தமிழக வெற்றி கழகத்தின் வாக்குறுதிகளை கூறியும், திமுக அரசின் ஊழல், வாரிசு அரசியல், மற்றும் நீட் தேர்வு உள்ளிட்ட விவகாரங்களை மையப்படுத்தி அவர்கள் எவ்வாறு வாக்காளர்களை ஏமாற்றி வருகிறார்கள் என்பதையும் எடுத்துக் கூறி 2026 இல் தமிழ்நாடு முதல்வராக விஜய் ஆட்சி அமைப்பார் எனவே உங்கள் பொன்னான வாக்குகளை மறக்காமல் விசில் சின்னத்திற்கு தந்து என்னை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என கூறி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
அனைத்து இடங்களிலும் வேட்பாளருடன் பெண்கள் மற்றும் இளைஞர்கள் என ஏராளமானோர் இணைந்து ஆதரவை தெரிவித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.



