தென்தாமரைகுளம், ஜூன் 26 –
தென்தாமரைகுளம் சிஎஸ்ஐ கிறிஸ்து சபை ஆலயத்தில் போதைப்பொருள் தடுப்பு தின விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு சபை போதகர் ஜாண் பிரவின் தலைமை தாங்கினார்.
தென்தாமரைகுளம் பேரூராட்சி வார்டு கவுன்சிலர் எட்வின் ராஜ் மற்றும் சோனியா ஜாண் ஆகியோர் முன்னிலை வகித்து,போதை விழிப்புணர்வு பற்றி பேசினர். சிறப்பு விருந்தினராக தென்தாமரைகுளம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் குத்தாலிங்கம் சிறப்புரையாற்றினார்.
இதில், சபை மக்கள் கலந்து கொண்டு போதை விழிப்புணர்வு பிரச்சார கோஷங்களை எழுப்பினர். நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை சபைக்குழு உறுப்பினர்கள் செய்திருந்தனர்.