தருமபுரி, ஆகஸ்ட் 25 –
தருமபுரி மாவட்டம் குண்டல்பட்டி பகுதியில் இயங்கி வரும் பச்சமுத்து கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரியில் இளங்கலை தமிழ் மூன்றாம் ஆண்டு பயின்று வரும் தாரணி என்ற மாணவி 2024-2025 ஆண்டு பல்வேறு பேச்சு போட்டிகளில் வெற்றி பெற்று ஏறத்தாழ 150-க்கும் மேற்பட்ட சான்றிதழ்கள், பதக்கங்களை பெற்றுள்ளார். அறம் அறக்கட்டளை சார்பில் இளம் சாதனை விருது, தங்கத்தமிழ் இளம் மேடைப் பேச்சாளர் விருது, 2025-ஆம் ஆண்டின் சிங்கப்பெண் விருதும் வாங்கி உள்ளார்.



