சூலூர், ஜூலை 10 –
பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு நாடார் மகாஜன சங்கம் சார்பாக சூலூர் ஆர்.வி.எஸ் கலை அறிவியல் கல்லூரி பள்ளி கலாம் ஹாலில் கோவை மாவட்டத்திற்கு உட்பட்ட ஆறாம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை அரசு மற்றும் தனியார் பள்ளியில் படிக்கின்ற மாணவ, மாணவிகளுக்கான பேச்சுப்போட்டி நடைபெற்றது. இப்பேச்சு போட்டியில் 500க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டு காமராஜரை பற்றிய பல்வேறு செய்திகளையும் அவர் ஆட்சிக் காலத்தில் நிறைவேற்றப்பட்ட சாதனைகள் வளர்ச்சிகள் குறித்து சிறப்பாக பேசினர். இதில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு தொகை மற்றும் பாராட்டு சான்றிதழ் பங்கு பெற்ற அனைத்து மாணவி மாணவிகளுக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.
இந்நிகழ்வினை சூலூர் பேரூராட்சி தலைவர் தேவி மன்னவன், ஆர்.வி.எஸ் கல்வி அறக்கட்டளை செயலாளர் சாரம்மாள், கலை கல்லூரி முதல்வர் சிவகுமார், கோவை சூலூர் நாடார் மகாஜன நிர்வாகிகள், பள்ளி ஆசிரியர்கள் குத்துவிளக்கு ஏற்றி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தனர். காலை முதல் மாலை வரை பல்வேறு குழுக்களாக பிரித்து போட்டி நடைபெற்றது. போட்டியில் வெற்றி பெற்ற மாணவர் மாணவிகளுக்கு ரொக்கப் பரிசு, பாராட்டு சான்றிதழ் மற்றும் பங்கு பெற்ற மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ்களை சூலூர் வட்ட காவல் ஆய்வாளர் லெனின் அப்பாதுரை, கோவை மாவட்ட வர்த்தக சங்கத் தலைவர் முத்துப்பாண்டி ஆகியோர் வழங்கினர். நிகழ்ச்சியில்
ஆர்.வி.எஸ் பள்ளி ஆசிரியர்கள், என்எம்எஸ் நிர்வாகிகள் மற்றும் நாடார் மகாஜனம் கோவை மாவட்ட செயலாளர் தயாநிதி, சூலூர் தொழிலதிபர் நெல்லை காசி கே. எட்வின், பாலச்சந்தர், கணேஷ், முத்துலிங்கம், சந்துரு, இசக்கி குமார், முத்துராம், ராபின்சன் ராஜேஷ் உள்பட மேட்டுப்பாளையம் மதுரை பகுதி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.