சென்னை, ஜூலை 02 –
தமிழ்நாடு விவசாயிகள் தொழிலாளர் கட்சி, தமிழக கட்டிட தொழிலாளர் மத்திய சங்கம், கட்டுமானம் மற்றும் மனை தொழில், ரியல் எஸ்டேட் தொழில், செய்வோம் நல சங்கம், சமூகநீதி சத்திரிய பேரவை என அனைத்து அமைப்புக்கும் மாநிலத் தலைவராக விளங்க கூடிய பொன்குமார் பிறந்த நாளை முன்னிட்டு சென்னை வடபழனி முருகன் கோயிலில் 27.06.2025 அன்று மாலை அமைப்பை சார்ந்த நிர்வாகிகள், தலைவர் பொன்குமார் மற்றும் அவரது குடும்பத்தினர் நலமோடு வாழ தங்கத்தேர் வடமிழுத்து வணங்கி வேண்டுதலை நிறைவேற்றினர்.
28.0.2025 அன்று காலை அவர்கள் குடும்பத்தைச் சார்ந்தவர்கள் மற்றும் அமைப்பைச் சார்ந்த நிர்வாகிகள் தலைவர் பொன்குமார் நலம் பெற வேண்டி முருகன் கோயிலை சுற்றி வணங்கி முருகபெருமானுக்கு பாலாபிஷேகம் செய்யப்பட்டது. இதன் தொடர்ச்சியாக நண்பகல் 12 மணி அளவில் வட பழனி முருகன் கோயில் அருகில் (100 அடிச் சாலை) 500 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
அன்று மாலை அமைப்பின் தலைமை அலுவலகம் மற்றும் தலைவரின் இல்லத்தில் அனைத்து அமைப்பினரும் சேர்ந்து தலைவர் முன்னிலையில் கேக் வெட்டி பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் தலைவர் பொன்குமார் நன்றியினை தெரிவித்து கொண்டார்.
மேலும் இந்நிகழ்ச்சியில் தலைவர் மைதிலி பொன்குமார், இளைஞரணித் தலைவர் வினோத் பொன்குமார், ரேவதி வினோத் குமார், தலைவர் அவர்களின் புதல்வி கே. திவ்யா, ரஞ்சித் குமார், பொதுச் செயலாளர்கள் என். சுந்தராஜ், பொறி.எஸ். ஜெகதீசன், சமூக நீதி சத்திரியர் பேரவையின் இணை பொதுச் செயலாளர் எஸ்.எம். குமார், டி.கே. டி.எம்.எஸ் தலைமை நிலையச்செயலாளர் டி. ரஜினிராஜ், அமைப்புச் செயலாளர் ஏ.ஜெ. நாகராஜ், சென்னை மேற்கு மாவட்ட அமைப்புசாரா மாவட்ட தலைவர் எஸ். விக்ரமாதித்தன், மத்திய சென்னை மாவட்ட தலைவர் டி.எஸ். ஏழுமலை, பொருளாளர் வி. சந்துரு, அமைப்புசாரா தொழிலாளர்கள் வாரிய உறுப்பினர் பாலமுருகன், அலுவலக நிர்வாகி ஏ. ராமு உட்பட பலர் கலந்து கொண்டனர்.