வேலூர், ஜூன் 30 –
வேலூர் விருப்பாச்சிபுரம் பகுதி சேர்ந்த கோபி என்கின்ற கோழி. இவர் சரித்திர பதிவேடு குற்றவாளி. இவர் பல்வேறு திருட்டு வழக்குகளில் சம்பந்தப்பட்டவர். இன்று வேலூர் கோட்டையில் சுற்றி பார்க்க வந்த பொது மக்களிடம் இருந்து செல்போனை பறித்துக் கொண்டு ஓடிய போது பொதுமக்கள் கோபியை துரத்தி உள்ளனர்.
அவர்களிடம் இருந்து தப்பிக்க கோட்டையின் மேலே இருந்து அகழியில் குதித்துள்ளார். பின்னர் அகழியிலிருந்து என்னை காப்பாற்றுங்கள் என கதறி அலறியுள்ளார். உடனடியாக பொதுமக்கள் வேலூர் வடக்கு காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். போலீசார் தீயணைப்பு துறையினருக்கு அளித்த தகவலின் விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் கோபியை அகழியில் இருந்து மீட்டனர்.
போலீசார் கோபி மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். செல்போன் திருட்டு குற்றவாளி கோட்டையில் இருந்து அகழியில் குதித்த சம்பவம் வேலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.