சுசீந்திரம், ஆகஸ்ட் 4 –
சுசீந்திரம் தாணுமாலயசுவாமி கோவிலில் இன்று காலை நான்கு முப்பது மணி அளவில் தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவரும் முன்னாள் அமைச்சருமான உதயகுமார் சுவாமி தரிசனம் செய்ய வந்திருந்தார். இன்று சோமவாரம் என்பதால் எல்லா சுவாமிகளுக்கும் அபிஷேகமும் அதிகாலை சுவாமி அம்பாளுக்கு அபிஷேகம் நடைபெற்றது.
பின்பு சுவாமி தரிசனம் செய்துவிட்டு கோயில் கல் சிற்பங்களை கண்டு ரசித்தார். கோவிலை சுற்றி சுவாமி தரிசனம் செய்து ஆஞ்சநேயர் சுவாமியையும் தரிசனம் செய்து சென்றார். அவருடன் தகவல் தொழில்நுட்ப மாவட்ட செயலாளர் குமரகுரு, சுசீந்திரம் அதிமுக பேரூர் செயலாளர் குமார் உடன் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.